என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும்படையினர் ஆய்வு"

    • 6 முதுநிலை ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
    • தவறிழைத்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தை சிறப்பாக நடத்தும் பொருட்டு கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்ய மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில் துணைப்பதிவாளர் சுந்தரம், 11 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 6 முதுநிலை ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இக்குழுவினால் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி மற்றும் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 47 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தவறிழைத்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆய்வின் போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது விநியோகத்திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொடர்புடைய சங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×