என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்த குரங்கிற்கு சடங்குகளுடன் இறுதி மரியாதை"

    • உயிரிழந்து கிடந்த குரங்கை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி இறுதி சடங்குகள் செய்தனர்.
    • 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி உள்ளே குரங்கின் உடலை இறக்கி அடக்கம் செய்து பின்னர் இறுதி மரியாதை செலுத்தினர்.

    ஓசூர்,

    ஓசூரில், போஸ் பஜார் பகுதியில் குரங்கு ஒன்று இறந்து கிடப்பதாக விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அமைப்பின் நிர்வாகிகள் அங்கு சென்று உயிரிழந்து கிடந்த குரங்கை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி இறுதி சடங்குகள் செய்தனர்.

    பின்னர் 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி உள்ளே குரங்கின் உடலை இறக்கி அடக்கம் செய்து பின்னர் இறுதி மரியாதை செலுத்தினர். இதில், விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×