என் மலர்
நீங்கள் தேடியது "கிளை திறப்பு"
- பரமக்குடியில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளை திறப்பு விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் கிளை மேலாளர் எஸ்.தங்கராஜ் செய்திருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரம் எல்.ஐ.சி. எதிரில் புதிதாக ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டின் கிளை அலுவலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு தலைமை தகவல் அதிகாரியும், பொது மேலாளருமான கே.பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மண்டல மேலாளர் கே.முரளி மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டின் அதிகாரிகள் மற்றும் அலு வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கிளையில் வீட்டு மனைகள் வாங்க, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் கட்ட, வீடு பழுது பார்க்க, விரிவாக்கம் செய்ய, வீட்டு கடனை மாற்றி கொண்டு கூடுதல் தொகை பெற கடன் வழங்கப்படுகிறது. மேலும் வணிக வளா கங்கள் கட்டுவதற்கும், வாங்குவதற்கும், வீட்டின் பெயரில் அடமான கடன் வாங்குவதற்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.
அதன்படி நிர்வாக கட்டணத்தில் 0.50 சதவீதமும், செய்முறை கட்டணத்தில் 0.25 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் கிளை மேலாளர் எஸ்.தங்கராஜ் செய்திருந்தார்.






