என் மலர்
நீங்கள் தேடியது "இடியும்"
- குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் காவிரி வெள்ளம் காரணமாக 6 வீடுகளின் சுவர் நீரில் ஊறிய நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
- இலவச வீடுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர் பகுதியில், காவிரி வெள்ளம் காரணமாக 6 வீடுகளின் சுவர் நீரில் ஊறிய நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இது பற்றி வருவாய்த்துறையினர் கூறுகையில், இந்த வீடுகளில் உள்ளவர்களை மண்டபத்தில் வந்து தங்கும் படி கூறியுள்ளோம். முதலில் வர மறுத்தனர். பின்னர் அபாயத்தை எடுத்து சொன்னபின் மண்டபத்தில் வந்து தங்க ஒத்துக்கொண்டனர். தற்காலிகமாக வாடகை வீடு பார்த்து தங்க கூறியுள்ளோம். இலவச வீடுகள் கட்டுமான பணி நிறைவு பெற்றதும், இலவச வீடுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






