என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனற்ற வாகன டயர்கள்"

    • புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு களப்பணிகள் பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதியில் நடைபெற்றது.
    • இதில் சுமார் இரண்டரை டன் எடை கொண்ட வாகன டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு களப்பணிகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதியில் நடைபெற்றது.

    சுகாதாரத்துறையினர், பேரூராட்சி டெங்கு களப்பணியாளர் மற்றும் கிராம சுகாதார பணியாளர் இணைந்து பொன்னமராவதி காமராஜர் நகர், புதுப்பட்டி, புதுவளவு, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பினை ஏற்படுத்தும் உள்ள பொருட்களை கண்டறிந்தனர்.

    அந்த வகையில் காணப்பட்ட சுமார் இரண்டரை டன் எடை கொண்ட வாகன டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், தியாகராஜன், ராமலிங்கம், முகேஷ் கண்ணா, பிரேம்குமார், கண்ணன் மற்றும் பேரூராட்சி டெங்கு களப்பணியாளர்கள், கிராமப்புற டெங்கு களப்பணியாளர்கள் இந்த பணியில் பங்கேற்றனர்.

    ×