என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்"

    • இருசக்கர வாகனத்தை நிறுத்தி கல்லால் தாக்கியுள்ளனர்.
    • இரண்டு பல் உடைந்து படுகாயம் அடைந்த மகேஷ் குமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த காளப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது28). கூலி தொழிலாளி. இவர் ஓசூரில் இருந்து காவாபள்ளி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த 25 முதல் 30 வயது மதிக்கதக்க மூன்று பேர் மகேஷ் குமார் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கல்லால் தாக்கியுள்ளனர்.

    இரண்டு பல் உடைந்து படுகாயம் அடைந்த மகேஷ் குமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×