என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 மான்கள் பலி"

    • பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் சந்திப்பு சாலையில் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
    • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் புள்ளி மான் சாலையைக்கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் சந்திப்பு சாலையில் நேற்று முன்தினம் இரவு கருவுற்ற நிலையில் 3 வயது பெண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து கிடந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அந்த புள்ளிமான் நேற்று மதியம் உயிரிழந்தது.

    இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று அதிகாலை 2 வயது பெண் புள்ளி மான் சாலையைக்கடக்க முயன்றபோது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதையடுத்து, இறந்த மான்கAளை பேரளி வனக்காப்பாளர் ஜெஸ்டின், வனக்காவலர்கள் சவுந்தர்யா, வீரராகவன் ஆகியோர் உதவி கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு சித்தளி காப்புக்காட்டில் புதைத்தனர்.

    ×