என் மலர்
நீங்கள் தேடியது "சி.டி.ஸ்கேன் சேவை"
- புதிய நவீன சி.டி.ஸ்கேன் சேவை திறக்கப்பட்டது
- பேராயர் டி.சந்திரசேகரன் திறந்து வைக்கிறார்
திருச்சி :
திருச்சி உறையூரில் சி.எஸ்.ஐ. மிஷன் பொது மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவீன வசதிகளின் புதிய மைல்கல்லாக 96 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் இந்த மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ளது.
இதனை இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் திருச்சி- தஞ்சை திருமண்டல பேராயர் டாக்டர் டி. சந்திரசேகரன் ஜெபம் செய்து திறந்து வைக்கிறார். மருத்துவமனை பொருளாளரும், இறை மக்கள் செயலாளருமான பாதிரியார் எஸ்.சுதர்சன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த 96 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் 24 மணி நேரமும் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு தரமான சேவை அளிக்கப்பட உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.






