என் மலர்
நீங்கள் தேடியது "740 மாணவிகளுக்கு"
- 740 மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- வங்கி பற்று அட்டையை வழங்கும் நிகழ்ச்சி
அரியலூர்:
சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியினை காணொலி வாயிலாக காணும் வகையில், அரியலூர் வாலாஜாநகரத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், புதுமை பெண் திட்டத்தில் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி, துணை தலைவர் கலியமூர்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சி தலைவர் அம்பிகா இளையராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோனல் பெனிடிக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.






