என் மலர்
நீங்கள் தேடியது "பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமாகும்."
- சிறப்பு கலச பூஜை, யாக பூஜை நடந்தது
- ரூ.1 கோடியில் திருப்பணிகள் நடக்கிறது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பேய்யாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமாகும்.
இந்நிலையில் சிறியமலை யோக ஆஞ்சநேய சுவாமி கோவிலில் கடந்த1967 -ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்று 55 ஆண்டுகளுக்கு பிறகு.தற்போது ஒரு கோடி மதிப்பில் கோவிலை பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு நான்கு மாதத்தில் யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராஜகோபுர பாலாலாயம் முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு கலச பூஜை, யாக பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் பூர்ணாஹூது நடைபெற்றது. தொடர் ராஜகோபுர திருப்பணிகான சிறப்பு பூஜை நடைப்பெற்றது பணிகள் தொடங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக உதவி ஆணையர் ஜெயா செய்து இருந்தார்.






