என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞரணி ஆலோசனைக்கூட்டம்"

    • ஆலோசனைக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    ஓசூர்,

    தி.மு.க. இளைஞரணி சார்பில் "இல்லந்தோறும் இளைஞரணி" என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி அனைத்து பகுதிகளிலும் கட்சியின் வீடுகள் தோறும் சென்று இளைஞர்களை, இளைஞரணியில் சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.

    அந்தவகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஓசூரில், ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார். பின்னர் ஒன்றிய செயலாளர்களிடம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் இதில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.முருகன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமு,கிருஷ்ணன், அசோக், வேணு மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    முடிவில், இளைஞரணி துணை அமைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    ×