என் மலர்
நீங்கள் தேடியது "சாலை விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது"
- இருதயம் சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது
- வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது
வேலூர்:
ஆரணி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 43). நேற்று முன்தினம் சாலை விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கலைச்செல்வியை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நேற்று இரவு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கலைச்செல்வியின் சிறுநீரகம் இருதயம் கல்லீரல் கண்கள் ஆகியவை சென்னையில் உள்ள காவேரி, பிரதாப் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற உடல் உறுப்புகள் தானம் இனிமேல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.






