என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "98 விநாயகர் சிலைகள் கரைப்பு"

    • விநாயகர் சிலை வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.
    • 100 அடி தூரத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதற்குள் மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 31-ந் கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடாத நிலையில், இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி விநாயகர் சிலை வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.

    விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 3-வது நாளான நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின்புறம் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், தர்மபுரி, தொப்பூரில் இருந்தும் விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு வந்து கரைத்தனர். சிலையைக் கரைக்க 100 அடி தூரத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதற்குள் மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    மேலும் 4 முதல் 8 பேர் வரை மட்டுமே சிலையைக் கரைக்க அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. பெரிய சிலைகளை கரைக்க பொக்லைன் எந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிலையைத் தண்ணீரில் கரைத்த பிறகு விநாயகர் சிலையை வைக்கும் மர சட்டங்களை பொதுமக்களே சேகரித்து கரையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இப்பணியை பார்வையிட தீயணைப்புத் துறையினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை வரை 98 விநாயகர் சிலைகள் கிருஷ்ணகிரி அணையில் கரைக்கப்பட்டன.

    ×