என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓசூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்"

    • எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர்.
    • மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதனை வரவேற்று, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் ஓசூரில், பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர்.

    இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் எஸ்.நாராய ணன்,பகுதி செயலாளர்கள் வாசுதேவன், ராஜி, அசோகா, மஞ்சுநாத், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    ×