என் மலர்
நீங்கள் தேடியது "மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி"
- மின்னல் தாக்கி 2 மாடுகள் இறந்தன.
- மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 70). விவசாயியான இவர் மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் குன்னம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. அகரம் கிராம ஊர் எல்லைப் பகுதியான வைத்தியநாதபுரம் செல்லும் சாலை அருகே கோவிந்தன் தனது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது பலமாக இடி விழுந்தது. இதில் 2 மாடுகள் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தன. இது குறித்து வேப்பூர் கால்நடை மருத்துவர் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மருத்துவர் கண்ணன், கால்நடை ஆய்வாளர் மணிமேகலை, விரைந்து வந்து இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்து அருகில் உள்ள காட்டில் அடக்கம் செய்தனர்.






