என் மலர்
நீங்கள் தேடியது "நுழைவு வாயில் திறப்பு"
- பள்ளிக்கு ஓசூரை சேர்ந்த தன்னார்வலரும், தொழிலதிபருமான தேனி ராஜேந்திரன் என்பவர் ரூ.40 லட்சம் மதிப்பில், நுழைவாயில் அமைத்து தந்துள்ளார்.
- இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி நுழைவாயிலை திறந்துவைத்தார்.
ஓசூர்,
ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் முல்லைநகர் பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,800 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு ஓசூரை சேர்ந்த தன்னார்வலரும், தொழிலதிபருமான தேனி ராஜேந்திரன் என்பவர் ரூ.40 லட்சம் மதிப்பில், நுழைவாயில் அமைத்து தந்துள்ளார். இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி நுழைவாயிலை திறந்துவைத்தார். தேனி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், பெற்றோர், ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி, தலைமையாசிரியர் அலெக்சாண்டர், ஆசிரிய, ஆசிரியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






