என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முந்தி செல்லும் வாகனங்கள்"

    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகிறது
    • பஸ்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அருகே உக்கடம் செல்லும் வகையில் புட்டுவிக்கி சாலை அமைந்துள்ளது.

    தற்போது உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருவதால் பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோட்டில் இருந்து வரும் லாரிகள், பஸ்கள், வாகனங்கள் அனைத்தும் இந்தப் புட்டுவிக்கி சாலையில் பயணித்து வருகின்றன.ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகிறது.

    இந்த சாலையில் செல்லும் பஸ்கள் மற்றும் லாரிகள் அனைத்தும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு மிக அதிவேகமாக செல்லும் நிலை உள்ளது. இதனால் எதிரே வரும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ போன்ற சிறிய வாகனங்கள் இதனை கண்டு அஞ்சும் சூழ்நிலை உள்ளது.

    மேலும் அவ்வப்போது சிறு,சிறு விபத்துகளும் உரசல்களும் நடைபெற்று வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வரும் பஸ்களும் இப்பாதையில் தான் பயணித்து வருகிறது.

    குறுகிய சாலையில் 2 பஸ்கள் ஒன்றை முந்திக் கொண்டு வரும்போது, எதிரே வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பதறியடித்து பக்கவாட்டில் ஓடைக்குள் விழும் சூழ்நிலையும் உள்ளது.

    உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருவதால் கரும்புக்கடை வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதற்கு மாற்று பாதையாக புட்டுவிக்கி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பஸ்களும் லாரிகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் சூழ்நிலை காணும்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பயந்து சூழ்நிலை உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அபராதம்

    அதிவேகமாக செல்லும் பஸ்களை போக்குவரத்துத் துறையினர் கண்டுபிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.

    அரசு பஸ்கள் டைமிங் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் அதிவேகமாக செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும் கனரக வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டுமென்று அதிவேகமாக செல்லும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து துறை இதனை அடையாளம் கண்டு செயல்படவேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×