என் மலர்
நீங்கள் தேடியது "தொடக்க வேளாண்மை சங்கம்"
- வேளாண் அதிகாரி தகவல்
- அதிக விலைக்கு விற்றால் புகார் அளிக்கலாம்
வேலூர்:
வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எம்.ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
வேலூர் மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சைபயறு, சோளம், கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக் கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அதிக விலைக்கு உரம் விற்றால் வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






