என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேர் கட்டிங்"

    • நல்ல முறையில் ஹேர் கட்டிங் செய்து கொண்டால் தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும்
    • கலெக்டர் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் பெண் ஒருவர் அவரது 2 மகன்களுடன் மனு கொடுக்க வந்திருந்தார்.

    தனது கணவர் இறந்து விட்டதால் குடும்பம் நடத்த வழி இல்லை. இதனால் வேலை தந்து உதவும்படி அவர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் நேரில் மனு அளித்தார். மனுப் பெற்றுக் கொண்ட கலெக்டர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    அந்த பெண்ணுடன் வந்திருந்த மகன்கள் இருவரும் புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்தனர்.

    இதனை கண்ட கலெக்டர் இது போன்ற முடி திருத்தம் செய்வது நல்லதல்ல. நல்ல முறையில் ஹேர் கட்டிங் செய்து கொண்டால் தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும். முதலில் இது போன்ற ஹேர் கட்டிங் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    உடனடியாக அந்த ஹேர் கட்டிங்கை திருத்தம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    ×