என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு இனிப்புகள்"

    • மாலை அணிவித்து மரியாதை
    • காங்கிரசார் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கீழ்பென்னாத்தூர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. கீழ்பென்னாத்தூர் சங்குமேடு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்தினை அமைத்திருந்தனர்.

    கீழ்பென்னாத்தூர் காங்கிரஸ் நகர தலைவர் செல்வம் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் நிர்வாகிகள் பாஷா, ராஜிவ்காந்தி, பாக்யராஜ், பரமசிவம், இளையராஜா, ஏழுமலை உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்.

    ×