என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம் பேரூராட்சி"

    • மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விட தீர்மானம் செய்தது.
    • செப்டம்பர் 1-ந் தேதி முதல், வரும் அடுத்த ஆண்டு(2023) மார்ச் 31-ந் தேதி வரைக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா மற்றும் தனிநபர் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஏலம் விடாமல் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமே வசூல் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடந்த நிலையில் ஜூலையில் நுழைவு கட்டணம் வசூலிப்பது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விட தீர்மானம் செய்தது. செப்டம்பர் 1-ந் தேதி முதல், வரும் அடுத்த ஆண்டு(2023) மார்ச் 31-ந் தேதி வரைக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. இது ரூ.96 லட்சத்திற்கு ஏலம் போனது. நுழைவுக்கு தனி, வாகனம் நிறுத்த தனி என சட்டவிரோதமாக கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது. சுற்றுலா பயணிகளிடம் அடாவடியாக நடந்து கொள்ளக்கூடாது, வெளி நாட்டவர், வெளி மாநிலத்தவர் அதிகம் வரும் சுற்றுலா பகுதி என்பதால் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்கள் முறையான சீருடை, அடையாள அட்டை மற்றும் பல மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×