என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்எண்ணெய் குண்டுவீச்சு"

    • சதீஷ்குமார் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து மண்எண்ணெய் குண்டுகளை முத்துக்குமார் மற்றும் ஏ.சுரேஷ் ஆகியோரின் வீடுகள் மீது வீசினர்.
    • தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது நண்பர் ஏ.சுரேஷ். இவர்களுக்கும் சுடலைநகரை சேர்ந்த சதீஷ்குமார் (35). அவரது நண்பர் சுரேஷ் என்பவர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து மண்எண்ணெய் குண்டுகளை முத்துக்குமார் மற்றும் ஏ.சுரேஷ் ஆகியோரின் வீடுகள் மீது வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுதொடர்பாக தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    ×