என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமராக்கள் வேலை செய்வதில்லை"

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் உஷா வயது 35 இவர் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மதியம் கல்லூரி முடித்த பின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராஜிப்பட்டி வழியாக செதுக்கரைக்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்து நடந்து சென்ற விரிவுரையாளர் உஷா அருகில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவவதற்குள் பைக்கில் வந்தவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    செயின் பறிப்பு சம்பவம் குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் சுற்றுப்பகுதியில் உள்ள பரதராமி, கே.வி. குப்பம், பேர்ணாம்பட்டு உள்ளி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை துரிதப்படுத்தப்பட்டது. இருப்பினும் பைக்கிள் திருடர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் அருகில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு அதில் பதிவான பதிவுகள் கொண்டும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் நகர் முழுவதும் சுமார் 95 கேமராக்கள் நகர மக்களின் பங்களிப்புடன் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதில் 15-க்கும் குறைவான கேமராக்களே வேலை செய்கிறது.

    பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்வதில்லை. இது மோட்டார் சைக்கிள் திருடர்கள், செயின் பறிப்பு கொள்ளையர்கள் உள்ளிட்டோர்களின் பதிவுகள் கேமராக்களில் பதிவாகவில்லை.

    இதனால் துப்பு துலக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    ×