என் மலர்
நீங்கள் தேடியது "சோதனை சாவடி களில் கண் காணிப்பு"
- தமிழக - ஆந்திர எல்லையில் கலெக்டர், எஸ்.பி. திடீர் சோதனை
- போதை பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க நடவடிக்கை
வேலூர்:
ஆந்திராவில் இருந்து தமிழ கத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்து வதை தடுக்க வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேற்று இரவு காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாகனங்களை நிறுத்தி திடீர் சோதனை செய்தனர்.
மேலும் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த பஸ்களி லும் சோதனை நடத்தினர். பின்னர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் நிருபர்களி டம் கூறியதாவது:-
கடந்த 11-ந் தேதி சென்னை யில் நடந்த மாவட்ட கலெக் டர்கள், போலீஸ் சூப்பிரண் டுகள் மாநாட்டில் போதை பொருள் கடத்தல், விற்ப னையை தடுக்க முதல் அமைச்சர் அறிவுரை வழங்கி யிருந்தார். அதன்படி ஆந்திரா வில் இருந்து தமிழகத்திற்கு வரும் சாலைகளில் வி.கோட்டா, சயனகுண்டா, பரதராமி, காட்பாடிகிறிஸ்டி யான்பேட்டை, முத்தரசிகுப் பம் ஆகிய 5 இடங்களில் உள்ள சோதனை சாவடி களில் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ள னர்.
கடந்த 3 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப் புணர்வு கூட்டங்கள் நடத்தி, மாணவர்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத் தப்படுகிறதா என நானும், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனும் தீவிர சோதனை நடத்தினோம்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்க ளுக்குபோதைபொருள் கடத் தலை தடுக்க தீவிர நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மருந்து கடைகாரர்களும் போதை பொருள் கடத்தலை தடுக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசு பஸ்களில் கஞ்சா உள் ளிட்ட போதைப் பொருள் கள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க போக்குவ ரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.
அவர்கள் கண்டக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ள னர். பயணிகள் ஏறும் போது அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்ய வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந் தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறுகையில், போதை பொருள் கடத்தலை தடுக்க சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். காட் பாடி வழியாக வரும் ரெயில் களில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி கஞ்சா உள் ளிட்ட போதைபொருட் களை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்தவர் களை கைது செய்து வருகின்ற னர். கஞ்சா கடத்திய 80 பேரின் வங்கி கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள் ளது என்றார்.
காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






