என் மலர்
நீங்கள் தேடியது "தடுத்து நிறுத்தி விசாரணை"
- மின் இணைப்பை சரிசெய்யாததால் விரக்தி
- அதிகாரிகள் சமரசம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் 2 ஆண் குழந்தைகளுடன், துணி மற்றும் புத்தக பைகளுடன் ஒரு பெண் வந்தார். அவர் திடீரென அங்கு தர்ணாவில் ஈடுபட முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில் அந்த பெண் காட்பாடியை அடுத்த ஏரந்தாங்கல் புத்தூர் கிராமம் சுகர்மில் ரோட்டை சேர்ந்த பொன்னி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறுகையில்:-
நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். எனது வீட்டுக்கு வரும் மின் இணைப்பை இருவாகனங்கள் 2 முறை சேதப்படுத்தி உள்ளது.
இதனால் என் வீட்டிற்கு மின்சாரம் தடைப்பட்டது. இதுகுறித்து வாகன உரிமையாளர்களிடம் கேட்டதற்கு சரி செய்து கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.
இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்கும்படி கூறினர். நான் பலரிடம் புகார் அளித்தும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார்.






