என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமராக்கள் பொருத்தம்"

    • எஸ்.பி. அலுவலகத்தில் காத்தாடி வாழ்க்கை என்ற 20 குறும்படம் வெளியீடு
    • 6 ஆயிரத்து 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் காத்தாடி வாழ்க்கை என்ற 20 நிமிட குறும்பட வெளியீட்டு விழா நேற்று நடந்தது. எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் காற்றாடி பறக்க விடுவதற்கு பயன்படும் கயிற்றில் மாஞ்சா தடவி பறக்க விடுவதால், அது அறுந்து போய், யார் கழுத் திலாவது படும்போது அவர் உயிரிழக்கிறார்.

    அதை பறக்க விடுபவர் சிறைக்குச் செல்கிறார். இதனால் இரு குடும்ப த்தாருக்கும் இழப்பு ஏற்ப டுகிறது. இதனால் மாஞ்சா பயன்படுத்த வேண்டாமே என்பதாக இந்த குறும்படம் தெரிவிக்கிறது.

    இதைத் தொடர்ந்து எஸ்பி ராஜேஷ் கண்ணன் கூறுகையில், மாவட்டத் தில் கடந்த 8 மாதங்களில், 115 கிலோ கஞ்சா பறிமு தல் செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 450 கிலோ தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்புடைய 26 பேர் மீது குண்டர் தடை சட்டம்- பிரயோகிக்க ப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்ட எல் லைகளில் 4 இடங்களில் வாகனங்களின் எண்கள் தெளிவாக தெரியும் வகை யிலான கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதில் காட்பாடி பகுதியில் இந்த கேமரா பொறுத்தப் பட்டு விட்டது. இது கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வரும் வாகனங்களை கண்டறிய பயன்படுத்தப்படும்.

    இது தவிர்த்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்களை கண்காணித்து, விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது' என்றார்.

    ×