என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புட்டி பால் ஆபத்தானது"

    • குழந்தைகள் நல டாக்டர் எச்சரிக்கை
    • கர்ப்பிணி தாய்மார்கள் சரிவிகித உணவு உண்ண வேண்டும்

    வேலூர்:

    காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்ப்பால் வார விழா ஜூனியர் ரெட் கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார்.

    வட்டார திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி வரவேற்று பேசினார்

    வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்க தலைவர் அருள் அரசி ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வேலூர் இந்திய மருத்துவ சங்கத்தின் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் நர்மதா அசோக் பேசுகையில்:-

    கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் காய்கறிகள் கீரை வகைகள் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் சரிவிகித உணவு உண்ண வேண்டும்.

    தாய்ப்பால் உங்கள் குழந்தையின் முதல் தடுப்பு மருந்து. புட்டி பால் மிகவும் ஆபத்தானது எனவே தாய்மார்கள் புட்டி பாலை தரவே கூடாது. முதல் ஆயிரம் நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்றார்.

    ×