என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை-மகன் படுகாயம்"

    • பைக்கில் சென்ற போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவர் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வெங்கடேசன் தனது மகன் கோபிநாத் ஆகிய 2 பேரும் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    ராமாலை தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பலத்த மழை பெய்தது. அப்போது சாலை ஓரம் இருந்த மரம் ஒன்று பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை-மகன் மீது முறிந்து விழந்தது. இது அவர்கள் தலை மீது விழுந்ததால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசன், கோபிநாத் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×