என் மலர்
நீங்கள் தேடியது "துரியோதணன் படுகளம்"
- 10 நாட்களுக்கு தெரு கூத்து நாடகமும் நடைபெற்றது.
- துரியோதணன் படுகளகத்திற்கான களிமண்ணாலான உருவம் வரையப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள களர்பதி பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி முதல் ேநற்று (3-ந் தேதி) வரை 30 நாட்கள் மஹாபாரத சொற்பொழிவும் நடந்தது.
மேலும் ஜூலை 24-ந் தேதி முதல் நேற்று (3-ந் தேதி) வரை 10 நாட்களுக்கு தெரு கூத்து நாடகமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மஹாபாரத சொற்பொழிவு நிறைவு நாளான நேற்று துரோபதியம்மன் கோவில் வளாகத்தில் துரியோதணன் படுகளகத்திற்கான களிமண்ணாலான உருவம் வரையப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (2-ந் தேதி) இரவு முதல் நேற்று (3-ந் தேதி) பிற்பகல் 12.45 மணி வரை நாடக கலைஞர்கள் கிருஷ்ணர், தர்மர், அர்ஜூணன், நகுலன், பீமன், சகாதேவன், பாஞ்சாலி, துரியோதணன் உள்ளிட்ட வேடமணிந்து துரியோதணன் படுகளம் குறித்து நாடக சொற்பொழிவுடன் துரியோதணன் படுகளம் நடைபெற்றது.
இதனை காண வந்த சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு துரியோதணன் படுகளம் நாடக நிகழ்ச்சியை கண்டுகளித்தும், துரோபதியம்மனின் அருள் பெற்று சென்றனர்.
பின்னர் அன்று மாலை கோவில் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த அக்னி குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்கவுண்டர் ஊர் மூப்பர், ஊர் நாய்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






