என் மலர்
நீங்கள் தேடியது "கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்"
- திம்மைய்யா (40), தளி கொத்தனூரை சேர்ந்த மாதய்யா மகன் சிவமலா (27) என்பதும், நரசிம்மமூர்த்தியை இருவரும் அடித்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
- இதுகுறித்து ரவி (எ) திம்மையா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் நரசிம்மமூர்த்தி (46). பி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இந்த கொலை குறித்து தளி இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் விசாரணை நடத்தினார்.
தேன்கனிக் கோட்டை தாலுகா, பி.பி. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவரான சாத்தம்மாவின் மகன் ரவி என்கிற திம்மைய்யா (40), தளி கொத்தனூரை சேர்ந்த மாதய்யா மகன் சிவமலா (27) என்பதும், நரசிம்மமூர்த்தியை இருவரும் அடித்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீஸ் தேடுவதை அறிந்து திம்மைய்யா, சிவமலா ஆகிய இருவரும் ஓமலூர் போலீசில் சரண் அடைந்தனர். பின்னர் தளி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ரவி (எ) திம்மையா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறுகையில் தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்ம மூர்த்தியிடம், எனது 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய கொடுத்தேன்.
அவர், அதை 775 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், எனக்கு 713 லட்சம் மட்டுமே கொடுத்தார். பணம் கேட்டு சென்றபோதெல்லாம், பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, எனது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க 750 ஆயிரமாவது கொடுக்குமாறு கெஞ்சியும், அவர்கொடுக்கவில்லை. நிலத்தை விற்றும், எனது மகளுக்கு சிகிச்சை கூட அளிக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில், சிவமலாவுடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தேன். இவ்வாறு ரவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.






