என் மலர்
நீங்கள் தேடியது "இண்டர்போல் போலீஸ் உதவி"
- தேஜ்மண்டல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார்.
- தேஜ்மண்டல் உடல் வங்காளதேசத்தை சேர்ந்த அவரது கணவர் முகமது ராக்கியிடம் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 2-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது.
சேலம்:
வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர் தேஜ்மண்டல் (வயது 28). இவர் சேலம் சங்கர்நகரில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இங்கு வங்காளதேசம் நாட்டை சேர்ந்த பெண்கள் சில ேபரை வேலைக்கு அமர்த்தி இருந்தார்.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சி பிரமுகருடைய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தேஜ்மண்டல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் சூட்கேசில் திணித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த தேஜ்மண்டல் உடல் வங்காளதேசத்தை சேர்ந்த அவரது கணவர் முகமது ராக்கியிடம் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 2-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது.
வெளிநாட்டுக்கு ஓட்டம்
போலீசார் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தேஜ்மண்டல் நடத்தி வந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெற்றதும், அதில் தேஜ்மண்டலுக்கு லட்சக் கணக்கில் பணம் குவிந்ததும், அவரது கள்ளக்காதலன் ஆத்தூரை சேர்ந்த பிரபாகர் துணையாக இருந்ததும் பள்ளப்பட்டி போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.இந்த நிலையில் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர், தேஜ்மண்டலை கொைல செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதில் காதல் ேஜாடியான லிப்லு என்கிற சத்தார்- நிஷி என்கிற நிஷா, ஷீலா, யாஷீ ஆகியோர் தலைமறைவாகினர். கொலை செய்தவுடன் இவர்கள் அனைவரும் வங்காள தேசத்துக்கு தப்பி சென்று விட்டனர்.
இண்டர்போல் போலீஸ் உதவி
வெளிநாடு தப்பிச் சென்ற 3 பெண்கள் உள்பட 4 பேரையும் இன்டர்போல் போலீஸ் மூலம் பிடிக்க தற்போது சேலம் மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய பாஸ்போர்ட் குறித்த தகவலையும் தூதரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அழகி தேஜ்மண்டல் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.






