என் மலர்
நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு"
- துர்க்கையம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனித இஞ்ஞாசியாரின் திருத்தேர் விழா நடந்தது.
ஓசூர்,
ஓசூர் பெரியார் நகரிலுள்ள வேல்முருகன் கோவில் வளாகத்தில் துர்க்கையம்மன் சன்னிதி உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து துர்க்கையம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.இதனை தொடர்ந்து 11 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
பாகலூர் அட்கோ பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை யொட்டி ஒரு லட்சம் வளையல் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் ஓசூர் பிரம்மமலையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.






