என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளில் வெள்ளம்"

    • மழை நீரில் பைக்குகளை சுத்தப்படுத்தும் வாகன ஓட்டிகள்
    • கமண்டல நதிவரை கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் வீரகோயில் சாலையில் மழை பெய்யும் போது அதிக அளவில் மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால் சாலையிலேயே மழை நீர் தேங்கி நிற்கிறது.

    சாலையில் தேங்கிய நீரில் பைக்குக்கு வாட்டர் வாஷ்

    தேங்கி நிற்கும் மழை நீரில் வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் பைக்குகளை ஓரமாக நிறுத்தி வாட்டர் வாஷ் செய்கின்றனர். இச்சாலையில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் இல்லை என்பதால் இது போன்ற நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே படவேடு ஊராட்சி நிர்வாகம் இச்சாலையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற போதிய கால்வாய் அமைத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சாலையின் சற்று தொலைவிலேயே படவேடு கமண்டல நதி ஓடுகிறது. இந்த மழைநீரை வெளியேற அருகே செல்லும் கமண்டல நதிவரை கால்வாய் அமைத்தால் தண்ணீர் தேங்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ×