என் மலர்
நீங்கள் தேடியது "குடிப்பழக்கத்தால் தொழிலாளி தற்கொலை"
- வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்த முனிராஜ் விஷம் குடித்து விட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகேயுள்ள அகல கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 18). நர்சரி கார்டன் ஒன்றில் வேலை பார்த்து வந்த முனிராஜுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் தரவில்லை. இதனால் மனமுடைந்த முனிராஜ் விஷம் குடித்து விட்டார்.
அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






