என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் போராட்ட விளக்க கூட்டம்"
- வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் ஓசூர் ஏ.எஸ்.டி.சி.டெப்போ முன்பு நடைபெற்றது.
- கூட்டத்திற்கு கிளை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு) வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் ஓசூர் ஏ.எஸ்.டி.சி.டெப்போ முன்பு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிளை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கலையரசன்,நஞ்சுண்ட ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை பொருளாளர் தங்கவேல் வரவேற்றார்.
இதில் மண்டல பொதுச்செயலாளர்முரளி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள் குமார்,அருண், பிரபாகரன், கோவிந்தன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சுபாஷ் நன்றி கூறினார்.






