என் மலர்
நீங்கள் தேடியது "நவாப் தேர்வு"
- கிருஷ்ணகிரி நகர தி.மு.க செயலாளராக மூன்றாவது முறையாக நவாப் தேர்வு செய்யப்பட்டு, திமுக தலைமை அறிவித்துள்ளது.
- கடந்த 2008 முதல், 14 ஆண்டுகளாக தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரசெயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக மூன்றாவது முறையாக நவாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி நகர தி.மு.க செயலாளராக மூன்றாவது முறையாக நவாப் தேர்வு செய்யப்பட்டு, திமுக தலைமை அறிவித்துள்ளது. இவரது மனைவி பரிதாநவாப், திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், நகர்மன்ற தலைவராகவும் உள்ளார்.
நேற்று முன்தினம் தமிழகம் முழுவதிலும் மாவட்ட வாரியாக தி.மு.க. உட்கட்சி நிர்வாகிகளை அக்கட்சி தலைமை அறிவித்தது.
அதன்படி கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக நவாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து நவாப் கூறியதாவது:-
கடந்த 1989 முதல் 1998 வரை 9 ஆண்டுகள் நான்கு முறை மாவட்ட பிரதிநிதி, வட்டச்செயலாளர். 1998 முதல் 2003 வரை 5 ஆண்டுகள் மாநில பொதுக்குழு உறுப்பினர். 2003 முதல் 2008 வரை 5 ஆண்டுகள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை தி.மு.க தலைமை எனக்கு வழங்கியுள்ளது.
கடந்த 2008 முதல், 14 ஆண்டுகளாக தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரசெயலாளர் பொறுப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது தலைமை மீண்டும் மூன்றாவது முறையாக என்னை நகர செயலாளராக அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழியில் என்னென்றும் நின்று கிருஷ்ணகிரி நகர வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






