என் மலர்
நீங்கள் தேடியது "சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை"
- பொதுமக்கள் போக்குவரத்திற்காக தரைப்பாலம் கட்டப்பட்டது.
- வெள்ள நீரால் பாலம் முழுவதும் உடைந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே உள்ள கதவணி புதூர் செல்லும் சாலை பாம்பாற்று ஓடையின் மேல் அமைந்துள்ள தரைப்பாலம் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் பாலம் உடைந்து அப்பகுதியில் உள்ள மக்கள் பாலத்தை கடந்து காரப்பட்டு வர முடியாமலும் காரப்பட்டு பகுதியில் உள்ளவர்கள் கதவணை புதூர் பகுதிக்கு செல்ல முடியும் அவதிக்குள்ளா கியுள்ளனர்.
2 வருடங்களுக்கு முன்பு ஆற்றுப்பாலம் அமைக்க வழி சீரமைத்து புதியதாக பொதுமக்கள் போக்குவரத்திற்காக தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து நகர் பகுதிக்கு வர அருகே உள்ள்ள மயிலாடுபாறை, எம்.ஜி.ஆர். நகர், அண்ணா நகர், என சிறு சிறு ஊர்களில் சுமார் 1000 வீடுகளில் வசித்து பொது மக்கள் இந்த பாலத்தை கடந்து சென்றே ஆக வேண்டும். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் இந்த ஆற்றை கடந்து ஆபத்தான நிலையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் மருத்துவமனைக்கு, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்க ஆற்றை கடந்து ஊத்தங்கரைக்கு சென்று வர பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இப்போது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக ஓடிய வெள்ள நீரால் பாலம் முழுவதும் உடைந்து முற்றிலும் மக்கள் சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
அந்த பகுதி பொதுமக்களின் நலன் கருத்தி மாவட்ட நிர்வாகம் உடைந்த பாலத்தை அகற்றப்பட வேண்டும். புதியதாக தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






