என் மலர்
நீங்கள் தேடியது "செடிகள் வளர்க்க வேண்டும்"
- சித்த மருத்துவர் வேண்டுகோள்
- 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு மூலிகை செடிகள் வழங்கப்பட்டன
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம், காட்பாடி காந்தி நகர் டாக்டர் பாஸ்கரன் சித்த மருத்துவ மையம் மற்றும் அக்சீலியம் கல்லூரி ஆகியன இணைந்து காட்பாடியில் உள்ள அக்சீலியம் கல்லூரியில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சியை நடத்தியது.
மூலிகை கண்காட்சி
முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து சித்தமருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சியை கல்லூரி துணை முதல்வர் சுமதி தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சித்த மருத்துவர்கள் பாஸ்கரன், வசந்த் மில்டன்ராஜ் ஆகியோர் பங்கேற்று சித்த மருத்துவம் குறித்தும், மூலிகைகள் குறித்தும் விளக்கமளித்த னர். டாக்டர் பாஸ்கரன் பேசுகையில்:- "நமது வாழ்வியல் சூழலில் பல்வேறு நிலைகளில் மூலிகை சார்ந்த சிகிச்சைகளே பெரிதும் பயனளித்துள்ளன.
பல்வேறு நோய்களில் இருந்து மக்களை முழுமையாக மூலிகைகள் குணமாக்கி உள்ளன. கபசுர குடிநீரே கொரோனா வைரஸை விரட்டும் மாபெரும் சக்தியாக உருவெடுத்ததை நாம் அறிவோம்.
வீடுகளில் அழகுக்காக செடிகளை வளர்க்காமல்
ஆகவே நமது அன்றாட வாழ்வில் இப்போது மூலிகைகளும் அதன் மூலம் தரப்படும் சித்த மருத்துவ சிகிச்சை முறைகளும் மக்களுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக உருவாகியுள்ளன.
வீடுகளில் அழகுக்காக செடிகளை வளர்க்காமல் நமக்கு மருந்தாக பயன்படும் சீத்தா பழம், வெட்டிவேர், வேம்பு, கொய்யா போன்ற மூலிகை செடிகளை வளர்க்க முன்வர வேண்டும்" என்றார்.
முகாமில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை கண்காட்சியில் 80 வகையான மூலிகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் பயன்கள் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விளக்கப் பட்டது.
மேலும் முகாமில் பங்கேற்றவர்கள் மற்றும் சிகிச் சைக்கு வந்த சுமார் 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மாக மூலிகை முககவசம், மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களான தமிழ்செல்வன், ஸ்வேதா லட்சுமி, வைத்தியர் ராஜா, அம்பேத்கர் ஆகியோர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.






