என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி சிலை மீட்பு"

    • கட்டிட பணிக்கு பள்ளம் தோண்டிய போது கிடைத்தது
    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்

    வேலுார், ஜூலை.30–-

    வேலூர் விரிஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மார்க்கபந் தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே அன்னதான கூடம் கட்டும் பணிக்காக சில வாரங்க ளுக்கு முன்பு அணைக் கட்டு எம்.எல்.ஏ.நந்தகுமார் அடிக்கல் நாட்டினார்.

    அன்னதான கூட்டம்

    தொடர்ந்து, கோவில் குளக் கரை அருகே அன்னதான கூடம் அமைப்பதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தொழி லாளர்கள் அஸ்திவாரம் அமைக்க, அந்த இடத்தில் பள்ளம் தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

    அப்போது, பூமிக்கு அடியில் கற்சிலை இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து சிலையை எந்த பாதிப்பும் இல்லாமல் தோண்டி எடுத்தனர்.

    சாமி சிலை மீட்பு

    அங்கு வந்த அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை பார்வையிட்டனர். 4 அடி உயரமுள்ள தட்ச ணாமூர்த்தி சிலை என தெரியவந்தது.

    இதையடுத்து சிலையை பத்திரமாக மீட்டு கோவில் வளாகத்தில் வைக்க கோவில் செயல் அலுவலர் சங்கர் தலைமையிலான ஊழியர்கள் நடவடிக்கை மேற் கொண்டனர்.

    கண்டெடுக்கப்பட்ட சிலையை அப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து பார்வை யிட்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×