என் மலர்
நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு"
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- டாக்டருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணி தரம் குறித்து கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரர்களும் பணிகளை விரைந்து செய்யவும் தரமான வகையில் செய்யவும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவ அலுவலர் டாக்டர்.அம்பிகா சண்முகம், டாக்டர். சிவசுப்பிரமணி, நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கண் மருத்துவர் டாக்டர். பர்ஹான், அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இறந்தவரின் உடலில் இருந்து கண்களை அகற்றி சாதனை மற்றொருவருக்கு பொருத்த நடவடிக்கை எடுத்தனர் என தகவலை அறிந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட டாக்டருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, தலைமை மருத்துவர் அம்பிகா சண்முகம், டாக்டர்கள் செந்தில் குமார், சிந்து, கணேஷ் ஆகியோர் இருந்தனர்.






