என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.என்.ஏ மாணவர்கள் சாதனை"

    • இந்திய அளவில் ஹேக்கத்தான் போட்டியில் பி.எஸ்.என்.ஏ மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • முதல் பரிசு மற்றும் ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகையை வென்றது.

    திண்டுக்கல்:

    அகிலஇந்திய வாகன ஆராய்ச்சி குழுமம் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்காக பாதுகாப்பான நிலையான மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் என்ற கருப்பொருளில் ஏ.ஆர்.ஏ.ஐ டெக்னாவுஸ் மொபிலிட்டி ஹேக்கத்தான் என்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டியினை நடத்தியது. இறுதிச்சுற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடைபெற்றது.

    இந்தியா அளவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 290 அணிகள் பங்கேற்றன. இதில் மொத்தம் 201 யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலிருந்து 30 அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் அணியின் பீனீக்ஸ் தலைப்பு தேர்வு செய்யப்பட்டது.

    கிராமப்புற மாணவர்கள் இந்திய அரசாங்கத்தின் அமைச்சகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பது என்பது மிகப்பெரிய மற்றும் பாராட்டத்தக்க முயற்சியாகும். இந்த முயற்சியில் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    இந்த பீனீக்ஸ் அணியினர் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிற்கு சிறந்த தீர்வை கண்டுபிடித்ததற்காக முதல் பரிசு மற்றும் ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்ெதாகையை வென்றது. மேலும் இந்த அணியில் உள்ள 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏ.ஆர்.ஏ.ஐ இன்டர்ன்சிப் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.

    ×