என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் அடித்துக்கொலை"
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.
- ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைகைப்பற்றி விசாரணை.
ஸ்ரீபெரும்புதூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்(வயது35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.
அவர் அதே பகுதி மகாத்மா காந்தி தெருவில் 3-வது மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தார். தினமும் அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க ஏசுதாஸ் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை ஏசுதாஸ் மார்க்கெட்டுக்கு செல்ல வில்லை. இதையடுத்து அவரது செல்போனுக்கு சகோதரி தொடர்பு கொண்டபோது எடுக்க வில்லை. சந்தேகம் அடைந்த அவர் அருகில் வசிக்கும் ஒருவரிடம் தெரிவித்து ஏசுதாசை பார்க்குமாறு கூறினார்.
அப்போது ஏசுதாஸ் வீட்டின் முன்பு இறந்து கிடப்பது தெரிந்தது. அவரது மூக்கு, காதில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைகைப்பற்றி விசாரணை நடத்தினர். ஏசுதாசின் முகத்தில் காயங்கள் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
நேற்று இரவு ஏசுதாசுக்கும் சிலருக்கும் இடையே பெண் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
எனவே மோதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று வீட்டின் 3 வது மாடியில் இருந்து வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.






