என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி அணிக்கு"

    • திண்டுக்கல்லில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் மதுரை, தேனி, விருதுநகர் உள்பட 8 அணிகள் பங்கேற்றன
    • இதில் மதுரை திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றன

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மற்றும் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி நடந்தது. ஜி.டி.என். கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் மதுரை, தேனி, விருதுநகர் உள்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் லீக் சுற்று அடிப்படையில் நடந்தது.

    பரபரப்பாக நடந்த இறுதிபோட்டியில் மதுரை திருநகர்-வாடிப்பட்டி அரசு பள்ளி அணிகள் மோதின. இதில் மதுரை திருநகர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வாடிப்பட்டி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. பின்னர் வெற்றிபெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

    பரிசுகளை ஜி.டி.என். கல்லூரி தாளாளர் ரத்தினம், மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, பட்டேல் ஹாக்கி அகாடமி நிறுவனர் ரமேஷ் பட்டேல், செயலாளர் ஞான குரு, பொருளாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×