என் மலர்
நீங்கள் தேடியது "செல்லகுமார் எம்.பி. பேட்டி"
- எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்ற புள்ளி விவரங்களை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் வழங்கினேன்.
- கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி ரெயில்வே மந்திரி எனக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த இறுதி திட்ட வரைவு தயாரிக்க ஒப்புதல் தந்தார்.
கிருஷ்ணகிரி,
ஜோலார்பேட்டை , கிருஷ்ணகிரி , ஓசூர் ரெயில் பாதை திட்டத்திற்காக இறுதி திட்ட வரைவு தயாரிக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மேலும் இதற்காக ரூ.2.45 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் எம்.பி. செல்லகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திரம் அடைந்தது முதல் கிருஷ்ணகிரிக்கு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்காக கடந்த 1995-க்கு பிறகு பல்வேறு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அதை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. கடந்த 2019 தேர்தலின் போது கிருஷ்ணகிரி ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்றி தருவேன் என நான் வாக்குறுதி அளித்தேன். அதன்படி நான் மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்தேன்.
அப்போது இந்த பகுதியில் வருவாய் இருக்காது என்பதை காரணம் கூறினார்கள். அப்போது இங்குள்ள கிரானைட் சங்க தலைவர், மாங்கூழ் உற்பத்தியாளர்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள், ஓசூர் முக்கிய நிறுவனங்களை சந்தித்து அந்த நிறுவனங்களில் இருந்து சரக்கு ரெயிலில் எவ்வளவு பொருட்கள் அனுப்பப்படும். எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்ற புள்ளி விவரங்களை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் வழங்கினேன்.
கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி ரெயில்வே மந்திரி எனக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த இறுதி திட்ட வரைவு தயாரிக்க ஒப்புதல் தந்தார். இது பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 108 கிலோ மீட்டர் பாதை அமைக்க வேண்டும். அதில் 7 கிலோ மீட்டர் அளவிற்கு மலைகள் உள்ளன.
இந்த பாதையை தொடாமல் 700 மீட்டர் சுரங்க பாதையுடன் மாற்று பாதையும் உள்ளன. இதில் 500 கோடி ரூபாய் வரையில் மிச்சமாகும். இன்னும் 3 மாதத்தில் இந்த ஆய்வு பணிகள் முடிந்து அறிக்கையை மத்திய அரசிற்கு வழங்கி, இந்த நிதி ஆண்டிலேயே இந்த திட்டத்திற்கான நிதியை பெற்று தர முயற்சிகள் ேமற்கொள்வேன். இதை யெல்லாம் ரெயில்வே மந்திரியிடம் கூறியுள்ளேன். நிச்சயமாக கிருஷ்ணகிரி ரெயில்வே பாதை திட்டத்தை பெற்று தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் நடராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், மாநில துணை தலைவர் அக. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், நகர தலைவர் லலித் ஆண்டனி நிர்வாகிகள் ஆறுமுகம், மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.






