என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு"

    • ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வகுப்புகள் தொடங்க உள்ளது.
    • சுய வேலை வாய்ப்பு பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பரசுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வருகிற ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும்.

    இதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்ந்துக் கொள்ளலாம். தமிழ்வழிக்கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் ஆகும்.

    இந்த பட்டயப் படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சிமருந்துகடை, விதைகடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையா ளர்களாகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம். பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர், கிருஷ்ணகிரி என்ற முகவரியையோ, இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்க ழகம், கோவை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

    ×