என் மலர்
நீங்கள் தேடியது "சென்ற வாரத்தை விட இந்த வாரம் விலை உயர்ந்துள்ளது."
- விவசாயிகள் மகிழ்ச்சி
- கிலோவிற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது
நெமிலி :
நெமிலி காவேரிப்பாக்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகமாக நெல் மற்றும் வாழை பயிர்களை பயிர் செய்துள்ளனர்.
இருந்த போதிலும் ஒரு சிலர் பூந்தோட்டபயிர்களான சம்பங்கி, கனகாம்பரம் முல்லை, போன்ற பூக்களை வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு பூக்களின் விலை சென்ற வாரத்தை விட இந்த வாரம் கிலோவிற்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






