என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன் பிணமாக மீட்பு"
- பள்ளி மாணவன் வைகைஅணை-பெரியாறு பிரதான நீர்பாசன கால்வாயில் குளிக்கச்சென்றபோது மூழ்கினார்
- நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் மாணவன் பிணமாக மீட்கப்பட்டார்.
நிலக்கோட்டை:
பெரியகுளம் அருகே எண்டபுளிபுதுப்பட்டியை சேர்ந்த பிச்சைமணி மகன் கமலேஷ்(13). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தனது உறவினருடன் வைகைஅணை-பெரியாறு பிரதான நீர்பாசன கால்வாயில் குளிக்கச்சென்றார்.
அப்போது திடீரென கமலேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் அணைப்பட்டி பகுதிக்கு சென்று அங்கு மிதந்து வந்த கமலேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






