என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுகூட்டலுக்கு"

    • மாணவ- மாணவிகள் தங்களுக்குரிய பதிவேண், மற்றும் பிறந்த தேதி கொடுத்து அவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.
    • ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 500 ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 -ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது.

    இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    கடந்த மாதம் 27-ந்தேதி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. அதில், 15 ஆயிரத்து 879 மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு இணையதளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டது. மாணவ- மாணவிகள் தங்களுக்குரிய பதிவேண், மற்றும் பிறந்த தேதி கொடுத்து அவற்றை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் கிடைத்த பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பி னால், தேர்வுத்துறை இணைய தளத்தில், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 2 நகல்கள் எடுத்து, நாளை மதியம் 12 மணி முதல் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட அரசு தேர்வு உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு, உயரியல் பாடம் ரூ.350, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணமும் மறுமதிப்பீடு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 500 ரூபாய் 

    ×