என் மலர்
நீங்கள் தேடியது "3 நோயாளிகளுக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை"
- 3 நோயாளிகளுக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
- மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை ஆகியவை பொது மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.
ஓசூர்,
ஓசூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாவட்ட இணை இயக்குனர் பரமசிவன் வழிக்காட்டுதலின்படி, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில் எலும்பு மருத்துவர்கள் வருண்குமார், சங்கர் கணேஷ் மற்றும் மயக்க மருத்துவர் ரமேஷ் மற்றும் நர்சுகள் அடங்கிய குழுவினர், 3 நோயாளிகளுக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
மேலும் இந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை ஆகியவை பொது மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சேவைகளை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.






