என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது."

    • ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது
    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சூரை தரைபாலம் வரை 3கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சூரை தரைபாலம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 6 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

    அப்போது பேசிய எம்.எல்.ஏ. சாலைப் பணிக்கான பொருட்கள் தரமாகவும், பணிகள் தாமதப்படுத்தாமல் முடிக்க வேண்டும், சாலை தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.உதவி கோட்ட பொறியாளர் நித்தின், காங்கிரஸ் ஒன்றிய தலைவர்கள் உதயகுமார், செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் திருமால், ஒப்பந்ததாரர் வேலு மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×